Vijay Sethupathi New Movie

Vijay Sethupathy New Movie : விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

நிச்சயம் இந்த கூட்டணி சூப்பர் டூப்பர் கூட்டணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் விஜய் சேதுபதி. படத்திற்கு படம் மாறுபட்ட நடிப்பு, மாறுபட்ட கதாபாத்திரம் என ரசிகர்களை கவர்ந்து மக்கள் செல்வனாக இருந்து வருகிறார்.

இவர் தற்போது நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தை இயக்கிய பாலாஜி தரணி தரண் இயக்கத்தில் சீதக்காதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

சேரன் இயக்கத்தில் வெளியாகிய படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும்.

அதே போல இந்த படமும் விஜய் சேதுபதிக்கு மீண்டும் மகுடம் சூட்டும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.