வெற்றிமாறன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்திலும், சூரி நடிப்பிலும், விடுதலை என்ற படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சூரி ,விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் வெற்றிமாறனுக்கு போஸ்டர் உடன் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார் அதில், எங்கள் இயக்குனர் வெற்றிமாறன் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.