GV Prakash Sister to Act with Vijay Sethupathi : Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Cinema News | Bhavani Sri
நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

Vijay sethupathi villain to vijay 10 crore salary – நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துக் கொடுத்து விட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் மீனவர் என இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

தல பேரை சொன்னாலே சும்மா அதிருதில்ல.. வியந்து போன நடிகை (வீடியோ)

பிகில் படத்தை அடுத்து மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான நடிகை, நடிகையர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது அவர் இப்படத்தில் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இப்படதில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.