Vijay Sethupathy

Vijay Sethupathi Video : ரோட்டுக்கடையில் காமெடி நடிகர் தோசை சுடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸாகும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஸ்கெட்ச் படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகின்றன. அங்கு விஜய் சேதுபதியும் காமெடி நடிகர் சூரியும் இணைந்து ரோட்டு கடையில் தோசை சுட்டுள்ளனர்.

பிரமாண்டத்தில் ஷங்கரையே மிஞ்சிய அட்லி – தளபதி 63 ஸ்பெஷல் அப்டேட்!

மேலும் அதே கடையில் அவர்கள் உணவருந்தியும் உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது.

இதனை பார்த்த ரசிகர்களும் இது தான் எங்களுடைய எதார்த்தம் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.