Vijay Sethupathi Upset about Sindhubaadh : Anjlai, Suriya, சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vijay Sethupathi Upset about Sindhubaadh :

விஜய் சேதுபதி கடும் அப்செட்டில் உள்ளாராம். எனினும் படம் அடுத்த வாரம் திரைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இம்மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

பிகில் ரெண்டாவது போஸ்டரில் இதையெல்லாம் கவனித்தீர்களா – வைரலாகும் செய்தி!

அண்மையில் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கலால் தற்போது இப்படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

பாகுபலி 2 தயாரிப்பாளருக்கு இவர் பண பாக்கி வைத்திருப்பதால் இப்படத்தை வெளியிட ஆந்திரா கோர்ட் தடை விதித்துள்ளது.

இதனால் விஜய் சேதுபதி கடும் அப்செட்டில் உள்ளாராம். எனினும் படம் அடுத்த வாரம் திரைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.