Vijay Sethupathi Speech in master Audio Launch
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியது என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

Vijay Sethupathi Speech in Master Audio Launch : லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்து வருகிறது.

தற்போது விஜய் சேதுபதி பேசியதாவது, போஸ்டர் ரிலீஸ் அப்போ விஜய் சார் ஜெகதீஷை அழைத்து என்னுடைய பெயருக்கு பக்கத்துல விஜய் சேதுபதியோட பெயரும் இருக்கணும்னு சொன்னாரு. அதனால தான் போஸ்டர்ல என் பெயரும் இருந்துச்சு என கூறியுள்ளார்.

பொதுவாக படத்துக்காக வெயிட் பண்றது வழக்கம் தான்.. ஆனால் விஜய் படத்துக்கு மட்டும் – அதிர வட்ட KPY தீனா.!

மேலும் விஜய் சார் எவ்வளவு பெரிய நடிகர்னு எல்லாருக்குமே தெரியும், அவரோட சேர்ந்து நடிச்சதுல ரொம்ப சந்தோசம்.

நான் ஏன் சார் ரொம்ப பேச மட்டறீங்கனு கேட்டேன், அவர் நான் நிறைய கவனிப்பேன், ரொம்ப கம்மியா தான் பேசுவேன் என கூறினார்.

மாஸ்டருக்கான பர்ஸ்ட் ஷூட் போட்டோஷூட் எடுக்கும் போதில் இருந்தே அவரோட நடிக்கறது எனக்கு ஈஸியா வசதியா தான் இருந்தது. ஒவ்வொரு சீன்லயும் உங்களுக்கு கியூட் எமோஷன்களால் சர்ப்ரைஸ் கொடுப்பாரு.

திருநெல்வேலி ஷூட்ல இருந்து வந்தேன் அதான் லேட் எனவும் கூறியுள்ளார்.

பிரிட்டோ அநியாயம் பண்ணிட்டாரு, நிறைய பாஸ் அவரே எடுத்துகிட்டாரு என் பேன்ஸ்க்கு பாஸே கொடுக்கல எனவும் எனக்கும் லலித்க்கும் ஆகவே ஆகாது. அடிக்கடி சண்டை வரும். என் பே மென்ட் கூட சரியான டைம்க்கு கொடுக்கல. ஆனால் அவர் நல்ல மனுஷன் என ஜாலியாக பேசியுள்ளார்.

விஜய் எங்கள் குடும்ப சொத்து மக்களின் முத்து – தயாரிப்பாளர் பிரிட்டோ அனல் பறக்கும் பேச்சு

லைப் ல எப்போதுமே எங்க அப்பா தான் மாஸ்டர், அவரை அடிச்சிக்க ஆள் கிடையாது. எங்க அப்பன் எனக்கு நெறய அறிவை குடுத்திருக்கான்.

ஒரு நாள் சரக்கபடிச்சுட்டு எங்க அப்பா போட்டோவை பார்த்து திட்டினேன், இன்னைக்கு ஏன் விட்டுட்டு போய் தொலைஞ்சனு பீல் பண்றேன்.

விஜய் பற்றி ஒரு வரியில் கேட்டதற்கு விஜய் ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன்… நான் சொல்லல, எல்லாருமே சொல்ராங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.