ஒரே மாதத்தில் வில்லனாக நடிக்க மூன்று படங்களில் ஒப்பந்தமாகி உள்ள விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் குறித்து பார்க்கலாம் வாங்க.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க தொடங்கி அதன் பின்னர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த விஜய் சேதுபதி விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்ததை தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டி வருகிறார்.

ஒரே மாதத்தில் வில்லனாக மூன்று படங்களில் ஒப்பந்தம்.. தலை சுத்த வைக்கும் விஜய் சேதுபதி சம்பளம் - எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

தமிழில் இதுவரை மாதவன், விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து ஒரே மாதத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படம், புஷ்பா 2, மேலும் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகும் பெயரிடாத படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த மூன்று படங்களின் மூலம் விஜய் சேதுபதி 80 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரே மாதத்தில் வில்லனாக மூன்று படங்களில் ஒப்பந்தம்.. தலை சுத்த வைக்கும் விஜய் சேதுபதி சம்பளம் - எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

அதாவது ஜவான் படத்திற்கு 30 கோடி ரூபாய் புஷ்பா 2 படத்துக்கு 25 கோடி ரூபாய் மற்றும் பாலகிருஷ்ணா படத்திற்கு 20 கோடி ரூபாய் என மொத்தம் 80 கோடி ரூபாய் ஒரே மாதத்தில் 80 கோடி ரூபாய் சம்பாதிக்க உள்ளார் விஜய் சேதுபதி. இந்த தகவல் இணையத்தில் வைரலாக பலரும் வியந்து போய் வருகின்றனர்.