பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் குறித்து வெளியான தகவல்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் வெற்றி கரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது.
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் திடீரென்று கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து சற்று ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இதனால் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என்பது ரசிகர்கள் பலரின் மனதில் கேள்விக்குறியாக இருந்தது.
அந்த வகையில் விஜய் டிவி நேற்று விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர் 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதற்கு முன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 100 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.