Vijay Sethupathi Salary Details

மாஸ்டர் திரைப்படத்தால் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Salary Details : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் படங்களில் நடித்து வருகிறார். நட்புக்காக பல நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் இவர் நடித்துள்ளார்.

சம்பளத்தை பல மடங்காக உயர்த்திய விஜய் சேதுபதி.. அதிர்ச்சியில் புலம்பும் தயாரிப்பாளர்கள் ‌

தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் விஜய் சேதுபதி காண மார்க்கெட் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் மாஸ்டர் படத்தில் விஜயை விடவும் விஜய் சேதுபதி நடிப்பும் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி உள்ளார்.

தற்போது ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளமாக கேட்கிறாராம். வில்லனாக நடிக்கும் படங்களுக்கு தனி ரேட் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களுக்கு தனி ரேட் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றாற்போல சம்பளத்தை ஏற்றியுள்ளார்.

விஜய் சேதுபதி தன்னுடைய தன் பலத்தை கிடுகிடுவென உயர்த்தியது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரேயடியா பலமடங்கு இப்படி சம்பளத்தை உயர்த்தினால் எப்படி என பலரும் புலமபி வருவதாக கூறப்படுகிறது.