Vijay Sethupathi Salary After Master

வெப் சீரிஸ் தொடரில் நடிப்பதற்கு சம்பளம் 55 கோடி வாங்கப் போகிறாராம் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Salary After Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் வெப் தொடர் ஒன்றில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு 55 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இது கோலிவுட் டாப் ஹீரோக்களின் சம்பளத்தையே முந்தி உள்ளதாக திரையுலகில் அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.