Vijay Sethupathi Review on Master
Vijay Sethupathi Review on Master

முதல் முறையாக நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படம் பற்றி பேசியிருப்பது ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Vijay Sethupathi Review on Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் மூலமாக முதல் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அதுவும் ஈவு இரக்கமில்லாத வெறித்தனமான வில்லனாக நடித்து இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Details About Master Release

அதைத் தவிர்த்து இவர் இதுவரை இந்த படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இப்படியான நிலையில் நேற்று விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது மாஸ்டர் படத்தை பற்றி பேசியுள்ளார்.

அதாவது மாஸ்டர் திரைப்படம் மாஸ்டர் பீஸ் திரைப்படம் என தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு இப்படம் செம மாஸாக வெறித்தனமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தைப் பற்றி இப்படியான விமர்சனத்தை பதிவு செய்திருப்பது ஒட்டுமொத்த விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களையும் உச்சக்கட்ட கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.