Vijay Sethupathi Review on Karnan

கர்ணன் படம் பார்த்த விஜய் சேதுபதி அப்படம் குறித்த விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

Vijay Sethupathi Review on Karnan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். நேற்று உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அர்ச்சனா கல்பாத்தி உட்பட பலர் படத்தை பாராட்டி பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நேற்று கர்ணன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் எக்ஸலன்ட் திரைப்படம், பார்க்க தவறி விடாதீர்கள் என பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.