Vijay Sethupathi Quite From Vikram Movie

விக்ரம் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi Quite From Vikram Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்புகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த படம் மட்டும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இத்திரைப்படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி வில்லன் படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்க அதிக சம்பளம் வாங்கும் விஜய்சேதுபதி இந்த படத்திலும் வில்லனாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு உள்ளார்.

Sivakarthikeyan ரசிகர்களுக்கு செம Treat ரெடி – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Cinema News

விஜய் சேதுபதி கேட்ட சம்பளத்திற்கு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நடிகர் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிக் கொண்டதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் கூட்டணியை ஆவலோடு எதிர்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.