Vijay Sethupathi Photoshoot Photos

மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் விஜய் சேதுபதி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Vijay Sethupathi Photoshoot Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் தொடர்ந்து பல படங்களில் மிரட்டி வருகிறார்.

இவர் இறுதியாக தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் இவர் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருப்பது போன்ற ஒரு போட்டோ ஷூட் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கையில் தொலைபேசியுடனும் வயதான கெட்டப்பில் கையில் சுருட்டுடனும் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இந்த மூன்று போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.