YouTube video

Vijay Sethupathi Pays Last Respect to Vadivel Balaji

தமிழ் சின்னத்திரையின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேல் பாலாஜி. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானவர்.

தற்போது 42 வயதாகும் இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் வடிவேல் பாலாஜி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. வடிவேல் பாலாஜியுடன் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் டிவி பிரபலங்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.