Vijay Sethupathi Pair With Anushka
Vijay Sethupathi Pair With Anushka

உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆறடி நடிகை.

Vijay Sethupathi Pair With Anushka : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

வில்லன் வேடங்கள் விஜய் சேதுபதிக்கும் பெரிய அளவில் கை கொடுத்தாலும் சமீபகாலமாக ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஹிட் கொடுக்கவில்லை.

இதனால் விஜய் சேதுபதி தனக்கு ஹிட் கொடுத்த பல இயக்குனர்களை தேடித்தேடி வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவும் சமந்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலிருந்து வெளியேறிய விஜய் சேதுபதி – காரணம் இது தான்!

இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இப்படத்தின் மூலமாக நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வரும் அனுஷ்கா ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, என பல நடிகர்களுடன் இணைந்து நடித்ததை தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தின் மூலமாக மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.