Vijay Sethupathi’s Next : விஜய் சேதுபதியின் அடுத்த பட டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. நேற்று நடந்த 96 படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தில் தான் இதனை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவால் ஒரு வருடத்திற்கு பல படங்களில் நடித்து வரும் ஒரே நாயகன் என்றால் அது விஜய் சேதுபதி மட்டும் தான்.

காற்றுள்ள போதே தூற்றி கொள் என்பதற்கேற்ப பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல் ஒரு தயாரிப்பாளராகவும் சாதிக்க தொடங்கியுள்ளார்.

பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் இணைந்து நடித்திருந்த 96 படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, திரிஷா என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் விஜய் சேதுபதியின் அடுத்த பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குனரான டெல்லிபிரசாத் தீனதயாள் இயக்க உள்ளார். தமிழகத்தில் 96 படத்தை ரிலீஸ் செய்த ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளார்.

மேலும் இப்படத்திற்கு துக்ளக் எனவும் பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே விஜய் சேதுபதி ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘சயிர நரசிம்மரெட்டி’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘கடைசி விவசாயி’, சிந்துபாத் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thuklak

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.