Vijay Sethupathi

Vijay Sethupathi Movie : சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் சிந்துபாத் ரிலீஸ் தேதி இதோ – ரசிகர்களுக்கு அடுத்தடுத்து கொண்டாட்டம்!

இவர் நடிப்பில் கூடிய விரைவில் சிந்துபாத் படம் திரைக்கு வரவுள்ளது. இதுபோக பல படங்களில் அவர் ஒப்பந்தமாகி வருகிறார். இதில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படமும் ஒன்று.

இப்படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இப்படத்திற்கு லாபம் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?

மேலும் இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் விஜய் சேதுபதியின் சொந்த ஊரான இராஜபாளையத்தில் துவங்கவுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.