Vijay Sethupathi Joins With Suriya

தளபதி விஜய் தொடர்ந்து முதல் முறையாக முன்னணி தமிழ் நடிகர் ஒருவருடன் கூட்டணி சேர்ந்து நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Joins With Suriya : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தளபதி விஜயுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெகு விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது நெட்பிளக்ஸ் இணையதளத்திற்காக மணிரத்னம் நவரச என்ற வெப்சீரிஸ் தொடரை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா ஓகே சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.

இதே கதையில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதியும் விருப்பம் தெரிவித்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. இது மட்டும் நிஜமாகிவிட்டால் முதல்முறையாக விஜய் சேதுபதியும் சூர்யாவும் ஒரே படத்தில் இணைநது நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.