Vijay Sethupathi
Vijay Sethupathi

Vijay Sethupathi : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மூன்று மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிடும் அளவு பிஸி நடிகராகவும் உள்ளார்.

அந்தவகையில் 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டும் இவருடைய நடிப்பில் தலா ஆறு படங்கள் வெளியாகியிருந்தன.

தளபதி 63 படத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா யோகி பாபு – அசத்தல் அப்டேட் இதோ!

இந்த சாதனையை இந்த ஆண்டே விஜய் சேதுபதி முறியடித்து விடுவார் போலிருக்கிறது.

ஆம். விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் விஜய் சேதுபதி – ரசிகர்களுக்கு செம செய்தி!

இதுபோக அடுத்ததாக ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

இவர் விஜய் நடிப்பில் புலி, விக்ரம் நடிப்பில் சாமி இரண்டாம் பாகம் போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here