வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்த நிலையில் சமீபத்தில் டிஎஸ்பி என்னும் திரைப்படம் வெளியானது.

வெப் சீரிஸில் நடிக்க இருக்கும் விஜய் சேதுபதி!!… வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மணிகண்டன் இயக்க இருக்கும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.