விமல் வீட்டு விசேஷத்துக்கு குடும்பத்தோடு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi in Vimal Son Birthday Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விமல். பசங்க என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அடுத்ததாக களவாணி என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் அடைந்தார்.

குழந்தையின் சிகிச்சைக்காக, ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட தாயுள்ளம்..

களவாணி படத்தில் நடந்தது போல தான் இவரது நிஜ திருமணம் நடைபெற்றது. தான் காதலித்து வந்த பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி ஒரு டாக்டர். கடந்த வருடம் 8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தார்.

Simbu-வை பழிவாங்க முயற்சி பண்ணுறாங்க – Silambarasan-னின் அம்மா Usha ஆவேசம்..!

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விமல் அவருடைய மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். விமல் மகனின் பிறந்த நாளுக்கு விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். கூத்துப்பட்டறையில் விஜய் சேதுபதி பயிற்சி பெற்றபோது விமலை நன்றாக தெரியும் என்ற காரணத்தினால் அந்த நட்பை தற்போது வரை மறக்காமல் அவருடைய வீட்டிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.