Vijay Sethupathi in Thalaivan Irukiran
Vijay Sethupathi in Thalaivan Irukiran

கமல்ஹாசன் நடிக்க இருந்த தலைவன் இருக்கின்றான் படத்தில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என கூறப்படுகிறது.

Vijay Sethupathi in Thalaivan Irukiran : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் தொடர்ந்து நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் கமல் நடிப்பதாக இருந்த சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கிறான் ஆகிய படங்களும் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கமலும் விஜய் சேதுபதியும் லைவ் வீடியோவில் உரையாடிக் கொண்டனர்.

அந்த காலத்துல அஜித்தோட கனவு இதுவா தான் இருந்துச்சு.. ஆனா இப்போ? தலயின் முதல் பட இயக்குனர் ஓபன் டாக்!

அப்போது விஜய் சேதுபதி உங்களிடம் நிறையவே கற்றுக் கொள்ள விரும்புவதாக கூறினார். இதனால் கமல்ஹாசன் தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்கலாம் என முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தையும் அவர் இயக்குவதாக இல்லை வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்க முடிவு எடுத்திருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் மாஸ்டர் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வைக்கும் திட்டத்தில் கமல் இருப்பதாலேயே இவர்கள் உரையாடிய லைவ் வீடியோவிற்கும் தலைவன் இருக்கிறான் என்ற பெயரையே வைத்திருந்தனர் எனவும் கூறுகின்றனர்.