Vijay Sethupathi in Shankar Direction

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi in Shankar Direction : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் தமிழில் கமல்ஹாசனை வைத்து இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பாதியில் நின்று உள்ளன.

இதற்கிடையே இயக்குனர் சங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதேபோல் பாலிவுட் சினிமாவில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்க உள்ளார்.

ராம் சரணை வைத்து இவர் இயக்கும் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கு சினிமாவில் விஜய் சேதுபதிக்கு நல்ல மார்க்கெட் உருவாகியிருப்பதால் பாலிவுட் ஹீரோக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என சங்கர் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஷங்கர் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அவருடைய திரைப்பயணத்தில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.