மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு படத்தில் விஜய்சேதுபதி நடித்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Vijay Sethupathi in Pisasu : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிசாசு. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி வருகிறது. ஆண்ட்ரியா பிசாசு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை பூர்ணா மற்றும் சந்தோஷ், பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. புதிய படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்.!!

பிசாசு படத்தைப் போல இந்த படத்திலும் பிசாசுதான் முக்கிய கதாபாத்திரம். மக்களுக்கு ஒரு சின்ன மெசேஜ் படத்தில் உள்ளது என இயக்குனர் மிஸ்கின் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நவீன பேயோட்டும் மனிதராக விஜய்சேதுபதி நடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறுகிய நேரம் மட்டுமே வரும் கெஸ்ட் ரோல் எனவும் தெரிவித்துள்ளார். பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்த துப்பாக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.