Vijay Sethupathi in Manikandan Direction

சூப்பர் ஹிட் இயக்குனருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi in Manikandan Direction : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் ரிலீஸ்க்கு வரிசை கட்டி நிற்கின்றன. கடந்த வாரம் மட்டுமே துக்ளக் தர்பார் மற்றும் லாபம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின.

திருவண்ணாமலை கோவில் தீபத் திருவிழா : நாளை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

மேலும் அடுத்ததாக கடைசி விவசாயி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ளார். மேலும் இவர் இதற்கு முன்னதாக விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை என்ற படத்தை இயக்கினார்.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? | Thalapathy VIjay, Pooja Hegde | HD

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.