Vijay Sethupathi in Managaram Remake

லோகேஷ் கனகராஜ் படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi in Managaram Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, முனீஸ்காந்த் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் கொடுத்தார். அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இயக்கிய மாநகரம் திரைப்படத்தை தற்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமக் செய்ய உள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.