Vijay Sethupathi in Bhagyaraj Direction

68 வயது இயக்குனருடன் இணைய உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதுகுறித்து இயக்குனர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Vijay Sethupathi in Bhagyaraj Direction : தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர் என பல திரைப் படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. ஆனால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்களில் நடிக்கும் அளவுக்கு பிசியான நடிகராக இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் ஒப்புக்கொண்டு வருகிறார். மேலும் இவரை வைத்து பாக்யராஜ் ஒரு படத்தை இயக்க இருந்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மீண்டும் ஒரு குறும் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாக்கியராஜ். அதுவும் கை கூடாமல் போய் விட்டது ‌. இந்த நிலையில் பத்து வருடத்திற்கு பிறகு மீண்டும் அந்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்க இருப்பதாக பாக்யராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Actor Director K Bhagyaraj at the Sathuranga Vettai Audio Launch