Vijay Sethupathi huge fan following in Kerala
Vijay Sethupathi huge fan following in Kerala

Vijay Sethupathi huge fan following in Kerala – மலையாளத்தில் விஜய், சூர்யா, விக்ரமுக்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதிக்கு தற்போது பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகிவிட்டதாம்.

சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவி நடிக்கும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக தற்போது இன்னொரு தெலுங்கு படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இவரது திரை பயணம் தற்போது தமிழ், தெலுங்கை தாண்டி மலையாளத்திற்கும் செல்கிறது. மேலும் இவர் நடித்த பல படங்கள் மலையாளத்தில் டப் செய்து அங்கும் வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம் மலையாளத்தில் விஜய், சூர்யா, விக்ரமுக்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதிக்கு தற்போது பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகிவிட்டதாம்.