Vijay Sethupathi helped Producer, Sindhubaadh, Anjali, Yuvan shankar Raja,Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vijay Sethupathi helped Producer :

விஜய் சேதுபதி தன் சார்பில் இருந்து ஒரு கோடியைக் கொடுத்து தயாரிப்பாளருக்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இம்மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் – வைரலாகும் வீடியோ!

அண்மையில் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கலால் தற்போது இப்படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்தப் பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமென்றால் தயாரிப்பாளருக்கு உடனடியாக நான்கு கோடி வரை தேவைப்படுகிறதாம் இதை அறிந்த விஜய் சேதுபதி தன் சார்பில் இருந்து ஒரு கோடியைக் கொடுத்து தயாரிப்பாளருக்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளார்.

இதற்கு முன்பு 96 ரிலீஸ் சமயத்திலும் அவர் இதுபோல் உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.