பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இவரால் உருவானது என்றே சொல்லலாம்.
ஆனால் திடீரென்று நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது கமல் விலகினால் யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அந்த வகையில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தத் தகவல் உண்மையா? இல்லை வதந்தியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த இருவரின் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பொருத்தமாக இருப்பார் என்பதை எங்களுடன் கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.