கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Vijay Sethupathi Gettup in Kadaisi Vivasayi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ வில்லன் குணசித்ர வேடம் கெஸ்ட் ரோல் என படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாக டஜன் கணக்கில் படங்கள் உள்ளன.

கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்.. வாயை திறந்தாலே இப்படித்தான் - இணையத்தில் கசிந்த சூப்பர் தகவல்

அப்படியான படங்களில் ஒன்று தான் கடைசி விவசாயி. காக்காமுட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் 70வயது விவசாயி ஹீரோவாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. அதாவது விஜய்சேதுபதி திரைப்படத்தில் முருக பக்தராக நடித்துள்ளார். அவர் வாயைத் திறந்தாலே அறிவுரையும் தத்துவத்தையும் தான் கூறுவார் என தெரிய வந்துள்ளது.