குட்டி குழந்தையின் மழலை பேச்சை ரசித்து உரையாடிய விஜய் சேதுபதியின் க்யூட் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது குட்டி குழந்தையின் மழலை பேச்சை ரசித்து உரையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில், விஜய் சேதுபதியிடம் அக்குழந்தை உங்களைப் பார்க்கணும்னு தோணுச்சு அதான் வந்துட்டேன் என மழலை குரலில் அழகாய் கூற அதனை ரசித்து கேட்டு மகிழ்ச்சி அடைந்த விஜய் சேதுபதி அச்சிறவனுக்கு கை நிறைய சாக்லேட்டுகளை கொடுத்து முத்தத்தைப் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார். இந்த க்யூட்டான வீடியோ ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.