Vijay Sethupathi

Vijay Sethupathi : நல்ல மனுஷன் நீங்க போய் இப்படி பண்ணலாமா என நெட்டிசன்கள் விளாசி எடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் திறமையான முன்னணி நடிகர்களில் ஒருக்கார் விஜய் சேதுபதி. குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை கவர்ந்த ஒரே நடிகரும் இவரே தான்.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி செய்ய இருந்த செயல் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

பொதுவாக அறிமுக இயக்குனர்கள் தங்களது படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட பிரபல நடிகர்களை நாடுவது என்பது வழக்கமான ஒன்று தான்.

அப்படி தான் தற்போதும் படக்குழு ஒன்று விஜய் சேதுபதியை நாடி தங்களின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுமாறு அணுகியுள்ளது.

எடையை குறைத்து அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா – முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்.!

இதனால் விஜய் சேதுபதியும் அந்த போஸ்டரை ரிலீஸ் செய்ய ஒப்பு கொண்டுள்ளார். அந்த படத்தின் தலைப்பு கடலை போட பொண்ணு வேணுமா? என்பது தான்.

ஆனால் இந்த படக்குழு படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் …………. போட பொண்ணு வேணும்? என்ற பெயரில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதனால் இந்த மாதிரி மோசமான ப்ரோமோஷன் தேடும் படக்குழுவிற்கு நீங்க போஸ்டர் ரிலீஸ் பண்ணலாமா? என திட்ட தொடங்கினர்.

இதனால் அப்செட்டான விஜய் சேதுபதி இனி எந்தவொரு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடப் போவதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் அவர் இந்த படத்தின் போஸ்டரையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

kadalai poda oru ponnu venum

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.