Vijay Sethupathi Character in Vikram Movie

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோரின் கதாபாத்திரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Vijay Sethupathi Character in Vikram Movie : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே தெரியவந்த தகவல்.

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் கதாபாத்திரம் இதுதானா? செம மிரட்டலா இருக்கே.!!

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தற்போது இவர்களின் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது பகத் பாஸில் அவர்களும் கமல்ஹாசனைப் போல போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மிரட்டலான தாதாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தினை கமல்ஹாசன் தயாரித்து நடிக்க அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.