Vijay Sethupathi

பிறந்தநாள் அதுவுமாய் பெரிய கத்தியில் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Birthday Celebration Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் விஜய் சேதுபதி தன்னுடைய 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தன்னுடைய பிறந்தநாளை பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்.

கையில் பெரிய கத்தியுடன் கேக் வெட்டியதால் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரை பார்த்து இவருடைய ரசிகர்களின் பெரிய கத்தியை கொண்டு கேக் வெட்ட தொடங்கினால் என்ன செய்வது என விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனால் விஜய் சேதுபதி மீது போலீஸ் நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.