Vijay Sethupathi in Bike Ride Video

ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் சுற்றிய விஜய் சேதுபதியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi Bike Ride Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் வில்லனாகவும் பல படங்களில் மிரட்டி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சில படங்களில் கெஸ்ட் ரோலில் துணிந்து நடிக்கிறார். இதெல்லாம் ஒருபுறமிருக்க சமீபகாலமாகவே விஜய் சேதுபதி பேசும் பேச்சுகள் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி நண்பர் ஒருவருடன் தலையில் ஹெல்மெட் கூட இல்லாமல் பைக்கில் சென்றுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் இப்படி ஹெல்மெட் இல்லாமல் செல்லலாமா.

இவரைப் பார்த்து இவருடைய ரசிகர்கள் இப்படியே பின்பற்ற மாட்டார்களா என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி தன்னுடைய பிறந்த நாளில் மிகப்பரிய கத்தியை வைத்து கேக் வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது சர்ச்சையைக் கிளப்ப இனி கவனமாக நடந்து கொள்வேன் என விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.