விஜய், ரஜினி, கமலை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகருக்கு வில்லனாக உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi As Villian to Karthi : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கார்த்திக் சுப்பராஜ் இயக்கம், தயாரிப்பு போன்றவற்றில் வெளியான குறும்படங்களில் நடித்து அதன் பின்னர் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி பிறகு ஹீரோ வில்லன் என படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.

ஹீரோவாகவும் படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வந்த இவர் விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்தார். பிறகு ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டோரை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்திக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் கார்த்தி அடுத்ததாக ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.