Vijay Sethupathi 800 Movie

முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படமாக உருவாகி இருந்த 800 என்ற படத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி எதிர்ப்பின் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

Vijay Sethupathi Announcement on 800 Movie : இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவருடைய வாழ்க்கை வரலாற்றை 800 என்ற பெயரில் படமாக்கவுள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகியிருந்தன. விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

பலரும் இனி விஜய் சேதுபதியின் படத்தை பார்க்க மாட்டோம் என கூறி வந்தனர். இதனால் முத்தையா முரளிதரன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய் சேதுபதியை விலகிக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்து இருந்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று விஜய் சேதுபதி தற்போது 800 படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.