Vijay Sethupathi and Tapsee
Vijay Sethupathi and Tapsee

விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி ஆகியோர் இணைந்து நடித்து வரும் படத்தில் மேலும் ஒரு காமெடி நடிகர் இணைந்துள்ளார்.

Vijay Sethupathi and Tapsee Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ ரண சிங்கம். இந்தப் படம் OTT வழியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இவர் நடிகை டாப்ஸி உடன் இணைந்து பழம்பெரும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

Vennila-Kishore

இந்த படத்தில் ஏற்கனவே யோகி பாபு, ரமேஷ் திலக், தேவதர்ஷினி என பல காமெடி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் தற்போது தெலுங்கு காமெடி நடிகரான வெண்ணிலா கிஷோர் என்பவரும் இணைந்துள்ளார்.

இது வெண்ணிலா கிஷோரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக தெரிய வந்துள்ளது.

ஒரே படத்தில் பல காமெடி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.