Vijay Sethupathi and Ajith
Vijay Sethupathi and Ajith

Vijay Sethupathi and Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மூன்று மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிடும் அளவு பிஸி நடிகராகவும் உள்ளார். அந்தவகையில் 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டும் இவருடைய நடிப்பில் தலா ஆறு படங்கள் வெளியாகியிருந்தன.

இந்த சாதனையை இந்த ஆண்டே விஜய் சேதுபதி முறியடித்து விடுவார் போலிருக்கிறது. ஆம்.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளதாம்.

இதுபோக இன்னொரு புதிய படத்திலும் தற்போது விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்த கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

விஸ்வாசம் படத்தை மிகச்சிறப்பாக இவர்கள் விளம்பரம் செய்த விதம் அஜித்துக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம்.

இதனால் எப்படியாவது அஜித் நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து விடவேண்டும் என கே.ஜே.ஆர் திட்டம் தீட்டி வருகிறதாம்.

ஆனால் அஜித் அடுத்ததும் போனி கபூருக்கே கால்ஷீட் கொடுத்திருப்பதால் அஜித்தின் கால்ஷீட்டை உடனடியாக பெறுவதில் இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த இடைவெளியில் விஜய் சேதுபதியிடம் இந்நிறுவனம் கால்ஷீட் பெற்றுள்ளதாம். அந்தவகையில் முதலில் விஜய் சேதுபதி படத்தையும் பின்னர் அஜித் படத்தையும் தயாரிக்க கே.ஜே.ஆர் திட்டமிட்டு வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.