vijay sethupathi 52 movie latest update
vijay sethupathi 52 movie latest update

விஜய் சேதுபதி புதிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இதுவரை விஜய் சேதுபதி ஏற்று நடிக்காத பரோட்டா மாஸ்டராக நடிக்க உள்ளார். மேலும் அதற்காக பிரத்தியேகமான பயிற்சியும் மேற்கொண்டு செட்டில் இருப்பவர்களுக்கு பரோட்டா சுட்டு கொடுத்துள்ளார்.

இவரின் இந்த செயலால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவரின் வெற்றிக்கு இந்த ஒரு டெடிகேஷன் ஒரு முக்கிய காரணம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.