AL vijay
விஜயை திருமணம் செய்து கொள்ள போகும் பெண் சன் டிவி அனிதாவை போலவே இருப்பதால் இவர் அனிதாவைதான் திருமணம் செய்கிறார் என்ற வதந்தி பரவியது.

Vijay Second Wife Photo : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். விஜய்யும் இயக்குநராக பிஸியானார். இந்நிலையில் இயக்குநர் விஜய் தற்போது தனது இரண்டாவது திருமணம் குறித்து அறிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஐஷ்வர்யாவை அவர் திருமணம் செய்யவுள்ளார். ஆனால் இவரது முகவெட்டு சன் டிவி அனிதாவை போலவே இருப்பதால் இவர் அனிதாவைதான் திருமணம் செய்கிறார் என்ற வதந்தி பரவியது.

ஆனால் உடனடியாக இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஜய், தான் திருமணம் செய்வது ஐஷ்வர்யா எனும் டாக்டரை என கூறியுள்ளார்.

Aishwarya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.