விஜய் தனது சம்பளத்தை 200 கோடியாக ஏற்றிய நிலையில் ஹீரோவை மாற்றியுள்ளது சன் பிக்சர்ஸ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு வரை தளபதி விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

மேலும் இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் விஜய் ரூபாய் 200 கோடி சம்பளம் கேட்கவே சன் பிக்சர்ஸ் ஹீரோவை மாற்றும் முடிவை எடுத்துள்ளது.

ஆமாம் அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் கன்னட நடிகர் யஷ் அல்லது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோரை வைத்து படத்தை தயாரிக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருவருக்கும் நல்ல மார்க்கெட் இருப்பதால் சன் பிக்சர்ஸ் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் இருந்துள்ளன.