தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக அதிக சம்பளம் வாங்க உள்ளார் நடிகர் விஜய.

Vijay Salary for Thalapathy 68 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்கத்தில் உருவாக உள்ள லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்துக்காக தளபதி விஜய் ரூபாய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் முதல் நடிகராக இந்த படத்தின் மூலம் தளபதி விஜய் மாறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது.