Vijay 65
தளபதி விஜய் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

முருகதாஸ் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு விஜய் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளத்திற்கு நிகராக தளபதி 65 படத்திற்கு அவர் சம்பளம் வாங்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனமும் விஜய் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.