தளபதி 66 படம் பற்றி சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Vijay Role in Thalapathy 66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

Thalapathy Vijay-க்கே சவால் விட்டவங்க அவங்க – Director Perarasu Bold Speech | HD

இந்த படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பேரவை நிகழ்வு : எம்எல்ஏ.க்கள் கேட்ட கேள்விகள்-அமைச்சர்கள் பதில்கள்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக தளபதி விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்த பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.