என்னுடைய டைரக்ஷனில் விஜய் நடித்தால் அவருடைய கதாபாத்திரம் இதுதான் என மிஷ்கின் ஓப்பனாக கூறியுள்ளார்.

Vijay Role in Mysskin Directions : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர். நேற்று தளபதி விஜய் தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் : பக்தர்களுக்கு அரசு அனுமதி..

என் டைரக்ஷனில் விஜய் நடித்தால் இதுதான் கதாபாத்திரம் - மிஸ்கின் ஓபன் டாக்.!!

இதே தினத்தில் இயக்குனர் மிஷ்கின் நேற்று ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் உங்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு ஜேம்ஸ் பாண்ட் என்று பதிலளித்தார் இயக்குனர் மிஷ்கின்.

மேலும் ஒரு ரசிகர் நடிகை ஆண்ட்ரீயா பிசாசு 2 படத்தில் நடித்தது பற்றி கேட்டதற்கு இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்திற்காக நடிகை ஆண்ட்ரீயா தேசிய விருதை வாங்குவார் என்றார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu படத்திற்காக கதறி அழுதேன்! – Live-வில் ஓப்பனாக பேசிய சிம்பு