Vijay Review for Soorarai Pottru

சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டு சூர்யாவிற்கு போன் செய்து நடிகர் விஜய் வாழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Review for Soorarai Pottru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரரை போற்று.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தல அஜித் படத்தை பார்த்துவிட்டு சூர்யாவை தொலைபேசி வாயிலாக பாராட்டியதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது விஜய் இந்த படத்தை பார்த்து சூர்யாவிற்கு போன் செய்து வாழ்த்தியதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அதாவது விஜய் சூர்யாவிற்கு போன் செய்து என்ன நடிப்பு நண்பா.. மிரட்டிட்டீங்க என பாராட்டியதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் சூர்யாவும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதால் இது நடந்திருக்க வாய்ப்புள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.