
லியோ படத்தைப் பார்த்து விஜய் என்ன சொன்னார் என்பது குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார் மிஷ்கின்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையில் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இந்த படத்தை பார்த்த விஜய் படம் சூப்பரா வந்திருக்கு என தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை இயக்குனர் மிஷ்கின் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவிக்க விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.